LGBT உரிமைகளை உரக்க சொன்ன "Ladies and Gentlewomen" படத்தின் இயக்குனர் Malini Jeevarathnam
திரைத்துறையின் இளைய மற்றும் திறமையான இயக்குனர்களில் மாலினி ஜீவரத்னம் (Malini Jeevarathnam) ஒருவர். 28 வயதில், தனது முதல் திரைப்படத்தை லேடீஸ் அண்ட் ஜென்டில்வுமன் (Ladies and Gentlewomen) என்ற பெயரில் இயக்கியுள்ளார்; ஒரே பாலினங்களுக்கிடையேயான அன்பின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம், அது இரண்டு ஆண்களாகவோ இரண்டு பெண்களாகவோ அல்லது திருநங்கைகளாகவோ இருக்கலாம். திரைப்படம் மாலினியின் நிஜ வாழ்க்கை அனுபவங்களைக் காட்டுகிறது, மக்கள் திருநங்கைகள், லெஸ்பியன் அல்லது ஓரினச் சேர்க்கையாளர்களின் வாழ்க்கையை எவ்வாறு கடினமாக்குகிறார்கள் மற்றும் அவர்களுக்கு எவ்வாறு அழுத்தம் கொடுக்கிறார்கள் என்பதை எல்லாம் காட்டியுள்ளார். இதையெல்லாம் தானே அனுபவித்ததாகவும் மாலினி கூறுகிறார். மாலினி வளர்ந்தவுடன், ஆண்களை விட பெண்கள் மீது அதீகமாக ஈர்க்கப்படுகிறார் என்பதை உணர்ந்தார். 25 வயதில், தான் ஒரு லெஸ்பியன் என்பதை மாலினி அறிந்திருந்தார். தன்னைப் போன்றவர்கள் பிழைப்பது மற்றும் சரியான...