8 வயதில் பாலியல் துன்புறுத்தல், 24 வயதில் Prajwala NGO வின் நிறுவனர். முனைவர் சுனிதா கிருட்டிணன்.

முனைவர் சுனிதா கிருட்டிணன்.

  முனைவர் சுனிதா கிருட்டிணன் ஒர் இந்திய சமூக செயற்பாட்டாளர். இவர் பாலியல் வன்முறைக்கும் அடிமைத்தனத்துக்கும் உட்பட்ட சிறுவர்களையும், பெண்களையும் காப்பாற்றி அவர்களுக்கு புதுவாழ்வு வழங்கும் பிராஜ்வாலா (Prajwala) என்ற அமைப்பின் இணைய அமைப்பாளர், முதன்மைச் செயற்பாட்டாளர். இந்த அமைப்பு சுமார் 5000 க்கும் மேலான எயிட்சு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கல்வி உதவிகளையும் வழங்குகிறது. இவர் இந்திய TED talks நிகழ்வில் வழங்கிய உரை மிகுந்த வரவேற்பைப் பெற்றது.




இவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பல பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு புணர்வாழ்வு வழிவகுத்ததால் இவர் மீது 14 முறை  கொலை வெறி தாக்குதல்கள்  மற்றும் மிரட்டல்கள் இடம்பெற்றுள்ளன. இவர் ஒரு முறை ஆட்டோ ரிக்சாவில் செல்லும் பொது ஒரு சுமோ வாகனம் ஆட்டோவின் மீது மோதி கொலை முயற்சி நடைபெற்றது, அந்த தாக்குதலில் படுகாயத்துடன் உயிர் தப்பினார் என்று அவரே கூறியுள்ளார்.




சுனிதாவின் கூற்றுக்கள்:

"இந்த சிக்கலுக்கு நீங்கள் எவ்வாறு தீர்வுகளைத் தர முடியாது என்று நூறு காரணங்களைக் கூறாதீர்கள், இந்த சிக்கலை தீர்க்க உதவும் உங்களுக்குத் தெரிந்த ஒரு வழிக்கு உங்கள் ஆற்றலைப் பயன்படுத்துவீர்களாக." - "Don't tell me hundred ways how you cannot respond to this problem, can you apply your mind for that one way that you can respond to that problem."

Her inspirational speech in TED Talks : Click here to watch.

 -ஸமிஉன் ( Sameun )


Comments