திருநெல்வேலி To ஜெர்மனி , தமிழக இளைஞரின் வெற்றிக்கதை.

"இந்த சமுகம் ஆயிரம் பேசட்டும் நம்  வாழ்க்கையில் நாம் வைக்கும் இலக்கு முக்கியமானது, வெற்றியை தடுக்க எந்த பின்னணியும் சூழ்நிலையும் காரணம் அல்ல, முயற்சி ஒன்றே போதும் வெற்றியடைய..!"

விஜய் பரவின் மஹாராஜன், சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே தெற்க்கு அச்சம்பட்டி.  தந்தை மஹாராஜன், தாய்  சந்திரா , தங்கை நவீனா, மனைவி ரத்தின மங்கை, மென்பொருள் உருவாக்குபவர் (software developer). தற்போது விஜய், ஜெர்மனியின் siemens நிறுவனத்தில் தலைசிறந்த Data Scientist ஆக இருகிரார். ஆனால் அது அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை.



தூத்துக்குடியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் 95 மற்றும் 90 சதவீதம் மதிபெண் பெற்று தன் பள்ளி படிப்பை முடித்தார். மேல் படிப்பிற்க்கு சென்னை சென்று படிக்க விரும்பினார். கௌன்சிலிங்க் மூலம் மெரிட்டில் ஐடி யில் சேர்ந்தார். ஆனால் கல்லூரி வாழ்க்கை அவ்வளவு இனிமையாக இல்லை.  அக்கல்லூரியில் விடுதி வசதி இல்லை வெளியில் தங்கி படித்தார். தினமும் ஒன்றரை மனி நேரம் பயணம் கல்லூரிக்கும் விடுதிக்கும். காலை 8 முதல் 6 வரை கல்லூரி நேரம்.  ஆனாலும் எப்படியோ முதல் செமஸ்டரை 89 சதவீதம் பெற்று இரண்டாம் செமஸ்டரில் அடி வைதார்.



இரண்டாம் செமஸ்டரில் கல்லூரிக்கும் விஜய்க்கும் ஏற்ப்பட்ட அதிருப்தியான சம்பவங்களால்,  கல்லூரி நிர்வாகம் ரெக்கார்ட் இல்லை என்று கூறி இவரை லேப் எக்ஸாம் (Lab Exam) எழுதவிடவில்லை. ஆதலால் அது அப்சென்ட் (Absent)கு பதில் அரியர்(arrear) ஆக விழுந்தது. 3 சப்ஜெக்டில் அரியர், 1 லட்சம் ஃபீஸ்சும் வீன் என மனவுலச்சலுக்கு ஆளானார் விஜய்.



இருப்பினும் மீண்டும் படிக்க நினைத்தார், தன் தந்தையும் ஒப்புகொள்ள தன் படிப்பை முதலில் இருந்து ஆரம்பித்தார். தன் வயது உள்ளவர்கள் எல்லாம் சீனியர்களாக இருக்க பலர் வசைப்பாடலுக்கு இடையில் தன் படிப்பை தொடர்ந்தார். "காலேஜில் எதாச்சு செஞ்சுருப்பான் அதான் இப்பிடி நிலை" என பலர் காதுபட பேச இக்கல்லூரி முடிந்து செல்லும்போது தலை சிறந்த மாணவனாக செல்ல வேண்டும் என எண்ணினார்.  ஒரே குறிக்கோள் விடா முயற்சியால் 91 சதவீதம் மதிப்பெண் பெற்று உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சிறந்த வேலைக்கும் சென்று விட்டார். தான் எங்கு தோற்றோமோ அங்கேயே வென்று காண்பித்தார்.


"நம் வாழ்வில் நமக்கு பிடித்த விசியத்தை குறிக்கோளாய் வைத்து அதற்க்கான முயற்சி செய்தால் ஒரு நாள் வெற்றி நிச்சயம்" என்பது விஜயின் மொழி. இன்னும் தன் முயற்சி விடாமல் தன் இலக்கை நோக்கி சென்றுகொண்டு இருக்கிரார் விஜய் பரவின் மஹாராஜன்.


-ஸமிஉன்(Sameun)

Comments