"தன்னால் செய்ய முடியும் என்றால், எவராலும் செய்ய முடியும்" நம்பிக்கை அளிகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்

    

ஐஸ்வர்யா ராஜேஷ் 'அ' விலிருந்து 'ஃ' வரை

  "ஐஸ்வர்யா ராஜேஷ்" இந்த பெயர் தான் தமிழ் சினிமா உலகில் அதிகம் பேசப்படும் பெயர் ஆகும்.  பெரிய பின்புலம் இல்லை, கீழ் நடுத்தர வர்க்க பெண் தான் ஆனால் சாதித்ததோ ஏராளம்.  சென்னையின் மறு பகுதியான சேரியில் பிறந்து வளந்தார்.  ஐஸ்வர்யாவின் கல்வி பருவம் அவ்வளவு இனிமையாக இல்லை. ஆம், தனது 8 வயதில் தன் தந்தையை இழந்தார். குடும்பம் மற்றும் குழந்தைகள்  எல்லாவற்றையும் அவருடைய அம்மா கவனித்துக்கொண்டார். தன் தந்தையின் இழப்பை ஒருபோதும் உணராதவாறு அவர் அம்மா பார்த்து கொண்டார்.தனது 13 வயதில் ஐஸ்வர்யாவின் முதல் சகோதரர் காலமானார். சிலர் இதை தற்கொலையாக இருக்கும் என்றனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவரது இரண்டாவது சகோதரர் சாலை விபத்தில் இறந்தார். அனைவரது மனமும் உடைந்து போனது. இதனால் அவரது தாயார் மனம் சிதைந்து போனார் மற்றும் அனைத்து பொறுப்புகளும் ஐஸ்வர்யா மீது வந்தது.

தான் 11வது படிக்கும் போது வேலை செய்து 225 ரூபாயை தனது முதல் சம்பளமாக பெற்றார். விழாக்கள் மற்றும்  நிகழ்வுகளை வழங்குவது,  பிறந்தநாள் வாழ்த்துரை போன்றவற்றின் மூலம் தனது வருவாயை மாதம் 5000 ரூபாய்வரை உயர்த்தி கொண்டார். ஆனாலும் தன் குடும்பத்திற்கு இத்தொகை போதுமானதாக இல்லை. அப்போதுதான் ஐஸ்வர்யா தன் சினிமா பயணத்தை தொடங்கினார். ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. அவளுடைய தோற்றத்திற்காக, அவளுடைய நிறத்திற்காக, அவளுடைய ஆளுமைக்காக பல விமர்சனங்களை எதிர்கொண்டார். சில இயக்குநர்கள் நேரடியாக "நீ கதாநாயகி பொருள் (Heroin Material) அல்ல" என்றும் கூறினார். ஆனாலும் மனம் தளராத ஐஸ்வர்யா தொடர்ந்து முயற்சித்தார். முதலில் ஒரு பெரிய நட்சத்திரத்திற்கு ஜோடியாக நடிக்க அவருக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் தானே கதையை நகர்த்தி செல்லும் முக்கிய கதாபாதிரமாக நடிக்க முடிவு செய்தார்.

படத்தில் பெரிய பாத்திரத்தை கொடுக்க தனது இயக்குனருக்கு நம்பிக்கை ஊட்டினார். பின்னர் அவர் பல பெண் மைய (Women Centric) படங்களை செய்யத் தொடங்கினார். மொத்தம் 7 பெண் மைய படங்களை செய்துள்ளார். அதில் அவர் தான் முன்னனி நடிகர். இப்போது தனது பெயருக்கு 40 க்கும் மேற்பட்ட திரைப்படங்களைக் கைவசம் கொண்டுள்ளார். தனது இயல்பான நடிப்பிற்காக 20 விருதுகளையும் வென்றார்.

"எல்லாம் உங்கள் கையில் உள்ளது, நீங்கள் தான் உங்களை காக்க வேண்டும், உங்களைப் காக்க எவரும் சூப்பர் ஹீரோவைப் போல வரமாட்டார்கள்." என்றும், 

"தன்னால் அதை செய்ய முடியும் என்றால்,எவராலும் அதை செய்ய முடியும், உன்மீது நீ நம்பிக்கை கொள்..!" எனவும் இன்றைய இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கிறார். 

-ஸமிஉன் (Sameun)

Show your love on her Instagram

Comments

Post a Comment