26 வயதில் கோடீஸ்வரரான கதை தெரியுமா? OYO Hotelsன் கதை கெளு...

உலகின் இளைய கோடீஸ்வரர் பற்றி தெரியுமா உங்களுக்கு..! 

தெரியாது என்றால் 26 வயதே ஆன ரிதேஷ் அகர்வால் (Ritesh Agarwal) பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ரிதேஷ்  இந்தியாவில் உள்ள ராயகட (Rayagada) என்னும் நகரில் பிறந்தார், அங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் சராசரியாக நாள் ஒன்றுக்கு  Rs.700 சம்பலமாக பெற்ற நிலையில் ரிதேஷ் தான் 18 வயது வரை ஏழ்மையில் வாடியதால் கல்லூரி படிப்பை படிக்க இயலவில்லை, அதன் தாக்கமாக சரியான வேலையும் இல்லை வருமானம் இல்லாத காரணத்தால் தன் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார். இத்தருனத்தை ரிதேஷ் தன் வாழ்க்கையின் கடுமையான காலமாக கருதுகிறார்.கையில் வெறும் 50 ரூபாயுடன்  ராயகடவில்  வீதி வீதியாக அலைந்தார். என்ற போதிலும் தன் வாழ்கையில் பணம் பெரும் பொருட்டாக இருந்ததில்லை, மேலும் பணம் தன் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை சரி செய்யும் சாவியாகும் என குறிப்பிடுவார்.




தன் அருகே செயல்படாமல் இருந்த ஒரு ஹோட்டலை கண்டார், அந்த ஹோட்டலின் மூலம் எந்த லாபமும் அடையாத  உரிமையாளரிடம்
அந்த ஹோட்டலை நஷ்டத்திலிருந்து லாபமாக்கி தருவதாக வாக்கு கொடுத்தார், ரிதேஷ். அந்த ஹோட்டல் ரூம்கலின் உட்பகுதியை
சிறிது அழகாக மாற்றி அதை படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றம் செய்தார். பிறகு அதன் பெயரை OYO Hotels என மாற்றினார். சில நாட்களில் காலியாக இருந்த ஹோட்டல்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்ததது. நாள்ளடைவில் ஒரு ஹோட்டல் நூறு ஹோட்டல்கள் ஆனது.




ரிதேஷ் அகர்வால் தன் 20 வயதில் முன்னனி முதலீட்டாளர்களை அனுகி பணம் பெற்றார், தன் 21 வயதில் சிறு அலுவலகம் தொடங்கி 50 நபர்களை தன்னுடன் வேலைக்கு சேர்த்தார். 22 வயதில் அது பெருகி 500 OYO Hotels ஆனது. 24 வயதில் அவர் சொத்து மதிப்பு 700 கோடியை தாண்டியது. தற்போது 26 வயதில் தன் 43,000 ஹோட்டல்கள் மூலம் உலகின் இரண்டாவது ஹோட்டல்
செயினை உருவாக்கியுள்ளார், இந்த உலகின் இளைய கோடீஸ்வரர் ரிதேஷ் அகர்வால்.





"பலர் இதை தடுதனர், கல்லூரிக்கு போக சொல்லி அறிவுரை கூறினர் ஆனால் எனக்கு அது விருப்பம் இல்லாமல் போனது. சிலர் நான் செய்வதை முட்டாள் தனம் என்றும் கூறினர் ஆனால் இப்போது?" என்று தன் 6 வருட உழைப்பால் உயர்ந்த ரிதேஷ் அகர்வால் தன் அலுவலகத்தில் 3,50,000 இளைஞர்களுக்கு வேலை வழங்கியுள்ளார்.



இதுவே 
கடின உழைப்பின் வெற்றி 

-ஸமிஉன் (Sameun)

Show your love to him: instagram


Comments

Post a Comment