பருந்தான ஊர்குருவி, கிரிகெட் வீரர் யாக்கர் நடராசன் பற்றி தெரியுமா?

பருந்தான ஊர்குருவி, நடராசன் என்னும் யாக்கர்  நடராசன்


தங்கராசு நடராசன் (T. Natarajan) என்பதை விட யாக்கர்  நடராசன் என்னும் பெயர் தான் தற்போது எல்லோர் மனதிலும் ஆழமாய் பதிந்துள்ளது. "யார்பா அது நம்ப தமிழ் பையனா இந்தியாக்கு விளாட போராரு? " என்று உலகின் மொத்த பார்வையும் அவர் பக்கம் தான். சொந்த ஊர் சேலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி. அப்பா நெசவு தொழில், அம்மா சிறிய கோழிக்கறி கடை வைத்துள்ளார். உடன் பிறந்தோர் 3 சகோதரிகள் 1 சகோதரர், நடராசன் தான் மூத்தவர். குடும்பம் வறுமையில். இதுதான் நடராசனின் பின்னனி. படித்தது அரசு பள்ளியில் என்றாலும் பென்சில்  நோட்புக் வாங்குவதற்கு கூட பணம் இல்லாமல் இருந்த காலங்கள் உண்டு. 

சிறு வயது முதல் கிரிகெட் மீது ஆர்வம் கொண்டிருந்த நடராசன் தான் டென்னிஸ் பால் கொண்டு விளையாடிய காலங்களை நினைவு கூறுகிறார். 20 வயதில்தான் கிரிகெட் பற்றிய முழு புரிதல் கிடைத்தது. அப்போது தான் சென்னையில் 4த் டிவிசனில் விளையாட தன் சகோதரரின் நண்பர் மூலம் வாய்ப்பு கிடைத்தது. அன்று தான் தங்கராசு நடராசனின் கிரிகெட் சாம்ராஜியம் உதயம் ஆனது. இருப்பினும் கிரிகெட் விளையாட அவசியமான பொருட்களுக்கு ஆகும் செலவுகள் மற்றும் வெளியூர் சென்று கிரிகெட் விளையாட ஆகும் செலவுகளை நடராசனால் சமாளிக்க முடியவில்லை. சிறு சிறு மேட்ச்கலில் இருந்து வரும் வருமானமும் ஸ்பொன்சர்ஸ் மூலம் வரும் கிரிகெட் உபகரணங்கள் மட்டுமே அவருக்கு பெரும் உதவியாக இருந்தது.

அன்டர் 16, அன்டர்19, அன்டர் 23 விளையாடியவர்கள் தான் தமிழகதின் ரஞ்சி த்ராபியில் (Ranji Trophy) விளையாடி முடியும் என்ற நிலையில், 2014ல் நேரடியாக ரஞ்சி த்ராபியில் விளையாடிய முதல் நபர் நடராசன் தான். 2017 ல் IPL ல் பஞ்சாப்க்கு விளையாட இருந்த நடராசன் பின் பிலாக்லிஸ்ட் செய்யப்பட்டார். பிறகு TNPLல் தான் ஒரு அங்கிகாரம் கிடைத்தது. ஆனல் அதன் பின் தன் முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் 1 வருடம் விளையாடவில்லை. 2018 ல் Sunrisers Hyderabad இவரை 40 லச்சதிற்க்கு வாங்கியது, இத்தனை தோல்விகளுக்கு பின் நடராசன் தன் வெறித்தனமான இன்னிங்ஸை துடங்கினார். தொனி ,ஏபிடி வில்லர்ஸ் என்று பெரும் ஜாம்பவான்களின் விக்கெட்களை எடுத்த நடராசனுக்கு பெரும் ரசிகர் கூட்டம் சேர்ந்தது. தனது திறமையால் தற்போது இந்தியாவிற்க்கு விளையாட போகிறார் யாக்கர்  நடராசன்.

கிரிகெட் அகாடமி அரம்பித்து 50 - 60 மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கிறார், அதில் பலர் சென்னை லீக்கில் விளையாடியுள்ளனர், 3 பேர் TNPL ல் விளையாடயுள்ளனர். தனது வெற்றிக்கு காரணமான தனது நண்பர், சகோதரர் ஜெய பிரகாஷ் பேயரை உடம்பில் டாடூவாக பதித்துள்ளார் யாக்கர்  நடராசன்.

-ஸமிஉன்

show your Love to him on Instagram: Click Here

Comments