ஹாலிவூட் தமிழ் பொண்ணூ Maitreyi Ramakrishnan

ஹாலிவூட் தமிழ் பொண்ணூ  #MaitreyiRamakrishnan

இந்த கொரொனா காலதில் திரைஅரங்குகள் ஏதும் இல்லாத நிலையில் நாம் பெருமளவு பயன்படுத்துவது  'OTT' (Over the top) தான்.  அப்படி Netflix முலமாக ஹாலிவூட் தொடரில் (Never I have ever) நடித்து  உலக புகழ் பெற்றவர் 

தான் நம் தமிழை தாய்மொழியாக கொண்ட மைத்ரேயி இராமகிருஷ்ணன் (Maitreyi Ramakrishnan),

 பதினெட்டு வயதே ஆகும் மைத்ரெயி  28 டிசம்பர் 2001 அன்று  கனடாவில் உள்ள மிசிசாகா (Mississauga) வில் பிறந்து வளர்ந்துள்ளார். 


இலங்கை உள்நாட்டு யுத்தம் காரணமாக கனடாவிற்க்கு குடி பெயர்ந்தது அவர் குடும்பம். அங்கு பள்ளியில் படித்து வந்த  மைத்ரேயி  பள்ளிவிழா நாடகங்களில் நடித்து நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தை வளர்துள்ளார். பின் மீடோவலே மேல்நிலைப்பள்ளியில்  (Meadowvale Secondary School) பட்டம் பெற்றார். நடிப்பின் மீது கொண்ட காதலால் தான் படிக்குமோதே வரும்காலதில் பெரிய நடிகையாக வர வேண்டும் என்று நினைதார்.


 மைத்ரேயி அந்த Netflix தொடரில் 'தேவி விஷ்வகுமார்'ராக வாழ்ந்து இருபார்.  ஆனல் அந்த கதாபாத்திரம் அவர்க்கு அவ்வளவு எளிதில்   கிடைக்கவில்லை. ஆம் அந்த  கதாபாத்திரத்தில் டிக்க மொத்தம் 15,000 பேர் விண்ணபித்து இருந்தனர். மைத்ரேயி தன் அம்மாவின் கேமராவில், நடித்து படம் பிடித்து அனுப்பினார். அப்பொது அவருக்கு வயது 17. அவரது நடிப்பும் அவரின் இயற்கையான தோற்றமும் அனைவற்கும் பிடித்து போக, மைத்ரேயி 'தேவி விஷ்வகுமார்' ரக உருவெடுத்தார். அந்த கதாபத்திரம் உலகளவில் பெரும் வரவேற்பை அவருக்கு பெற்று தந்தது.

சிறுவயதிளே எல்லை இல்லா புகழை பெற்ற மைத்ரேயி இராமகிருஷ்ணன் இளம் தலைமுறைக்கு எடுத்துகாட்டாக திகல்கிறார்.

-Sameun(ஸமிஉன்) 

Comments

Post a Comment