"பார்வை குறைபாடு ஒரு தடை இல்லை" கூறுகிறார் பூரணசுந்தரி IAS
"பார்வை குறைபாடு ஒரு தடை இல்லை" கூறுகிறார் பூரணசுந்தரி IAS
#பூரணசுந்தரிIAS
இன்று தமிழகமெங்கும் கொண்டாடப்படும் ஒரு நபர் என்றால் அவர் பூரணசுந்தரி தான். இந்தியா முழுவதும் பல்லாயிரம் பேர் எழுதிய IAS தேர்வில் 829 நபர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதில் 286 வது இடத்தை பிடிது அசத்திய பூரணசுந்தரிக்கு பார்வை கிடையாது. மதுரை மணி நகரத்தில் வசிக்கிரார். தந்தை முருகேசன், தாய் ஆவுடையார், தம்பி சரவணண் என சிறிய நடுதரக்குடும்பம்.
![]() |
பூரணசுந்தரி IAS குடும்பத்துடன் |
இவர் பிறக்கும் போது பார்வையோடு தான் பிறந்துள்ளார், தான் 1ஆம் வகுப்பு படிக்கும் போது தன் பார்வை நாளடைவில் மங்குவதை கவனித்துள்ளர். பல மருத்துவர்களை அணுகிய போது இது ஆயிரத்தில் ஒருவர்க்கு வரும் நரம்பு சுருக்க பாதிப்பு என தெரியவந்தது. பிறகு அறுவை சிகிச்சை செய்தும் பயன் இல்லாமல் முழு பார்வையையும் இழந்தார். இதற்கெல்லாம் தளராமல் ப்ரைலி (braille) கற்று, தாய் தந்தை உதவியுடன் படித்து அதை ரெக்கர்ட் (record) செய்து கேட்டு படித்து, 10ஆம் வகுப்பில் 471 மதிப்பெண்கள் மற்றும் 12 ஆம் வகுப்பில் 1092 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தார். பின் பாத்திமா கல்லுரியில் B.A ENGLISH LITERATURE படித்துள்ளார். 2018ல் நடந்த வங்கித்தேர்வில் வெற்றிப்பெற்று, அரசு ஊரக வளர்ச்சி வங்கியிள் கிளர்க்காக பணியாற்றினார்.
IAS ஆவது அவர் சிறு வயது கனவல்ல, எல்லாரும் போல Doctor, Engineer என பல கானவுகள் மாறிய வண்ணம் இருந்துள்ளார். 10 ஆம் வகுப்பில் தான் கொடுத்த பேட்டியின் போது Lawyer ஆக வேண்டும் என கூறியிருந்தார். 2016இல் இருந்து 20கும் அதிகமான போட்டித்தேர்வுகள் எழுதியுள்ளார். பல தோல்விகள் கண்டாலும் 2019இல் எழுதிய சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை படைதுள்ளார்.
தன் திறமையால் வெற்றிப்பெற்று உலகமுழுதும் பாராட்டுகள் பெற்று இன்றைய இளையச்சமுதாயதிற்க்கு ஒரு எண்ணற்ற எடுத்துக்காட்டாக திகழ்கிறார் பூரணசுந்தரி IAS.
-ஸமிஉன்(Sameun)
😍 semma
ReplyDeleteNandri nanba...
Delete